You are visitor no:

Saturday, April 12, 2008

something interesting from karuthu.com about humanity

என் ஜாதி, என் மதம், என் இனம், என் நாடு என்று மட்டுமே சிந்திப்பது குறுகிய மனப்பான்மை (நான் கூறவில்லை வசுதைவ குடும்பகம் என்னும் ஸ்லோகம் அப்படி கூறுகிறது) இதோ இன்னொருவர் *உலக உயிர்களெல்லாம் பொதுவெனக் கண்டு இரங்குக* என்று கூறினார். வேறு யாராக இருக்கும் அருட்பிரகாச வள்ளலார் தான். அது மட்டுமா கூறினார் *இறைவன் ஒருவனே* என்றும் *சாதி சமய வேறுபாடு அற்ற நிலை* என்றும் கூறிச்சென்றார். *மந்திரமாய்ப் பதமாகி, வண்ண மாகி வளர்க லையாய்த் தத்துவமாய்ப் புவன மாகி சந்திரனாய், இந்திரனாய், இரவி யாகித் தானவராய், வானவராய், தயங்கா நின்ற தந்திரமாய், இவையொன்றும் அல்ல வாகித் தானாகித் தனதாகித் *தான்நான்* காட்டா அந்தரமாய் அப்பாலாய், அதற்கப் பாலாய் அப்பாலுக்கப் பாலாய் அமர்ந்த தேவே* மேலே கூறிய கவியில் இறைவன் எங்கும் எதிலும் ஜீவித்திருக்கின்றான் என்கிறார். மேலும் அன்பே தான் கடவுள் என்றார். *அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படும்பரம்பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புருவாம் பர சிவமே!* இறைவனை எங்கே காண முடியும் என்பதற்க்கு வள்ளலார் அளிக்கும் விளக்கத்தில் இருந்து இவரும் திருமூலரைப் போலவே சிந்தித்திருக்கிறார் என்பது புலனாகிறது. *எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவரவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெரு மான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் சிந்தை மிக விழைந்த தாலோ* அணைத்து உயிர்களையும் தன் உயிர்போல் எண்ணுவது மட்டுமல்லாது, அன்பின் மிக்கியத்துவத்தை உணர்த்த இறைவனிடம் வேண்டுவது கூட, தான் அணைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்கிறார். *அப்பா! நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்! ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்!* சமரச சன்மார்க்க நெறியில், ஆண் பெண் வேறுபாடு காணாது, சாதி - சமயம் - மதம் - கோத்திரம் - சாத்திரம் - உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற பேதங்கள் இல்லாமல் *அனைவரும் சமம்* என்கிற கோட்பாடும், கடவுளை வணங்கும் பொழுது தனக்கு மட்டுமே அல்லாது இந்த *உலகமே* நன்றாக வாழும்படி வேண்டுதல் சுத்த சன்மார்க்க நெறியாகும்.